சீயம்

சீயம்(அ)சுழியான், சிறப்பு தினங்களில் செய்யப்படும் இனிப்புவகை.

[Total: 2    Average: 4.5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

எத்தனை குடுக்கும் : 12 - 15
பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : பருப்பு / கடலை
சமையல் குறிப்பு வகை : காலை உணவு பட்சணம்

தேவை :

    உள்ளடம்:

    • கடலை பருப்பு - 2/3 கப்(250ml கப்) (அ) 125 கிராம்
    • வெல்லம் – 175 கிராம்
    • ஏலக்காய் – 4
    • துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
    • சமையல் எண்ணெய் – வறுப்பதற்கு

    மாவு:

    • மைதா – 1/2 கப்(250ml கப்) (அ) 75 கிராம்
    • சோடா மாவு – 1/4 டீஸ்பூன்
    • தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை :
    1. கழுவிய பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஏலக்காய் விதைகளை நன்றாக அரைக்கவும்.
    2. மைதா மாவு, உப்பு, சோடா மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு தயார் செய்து கொள்ளவும்.
    3. கடலை பருப்பை தண்ணீரில் நன்றாக வேகும்வரை வேகவைக்கவும்; பிறகு நீரை வடிக்கவும்.
    4. வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பாவு வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டவும்.
    5. வேகவைத்த கடலை பருப்புடன் தயார் செய்த பாவு, அரைத்த ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலக்கவும்.
    6. அரை மேசைக்கரண்டி பருப்பு கலவையை எடுத்து 3-செ.மீ அளவு உருண்டையாக நன்றாக உருட்டவும்.
    7. பாத்திரத்தில் உள்ள அனைத்து பருப்பு கலவையையும் மேலே செய்தவாறு உருண்டைகளாக உருட்டவும்.
    8. ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்த மாவில் நனைத்து நன்றாக வறுக்கவும்.

    மற்ற பெயர் : Seeyam, Suliyaan,Thoppam

    ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/seeyam


     




     

    Leave a Reply

    Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

    சமையல் குறிப்பை தேடுக
    பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
    தொடர்புடைய சமையல் குறிப்பு
    அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

    By continuing to use the site, you agree to the use of cookies. more information

    The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

    Close