காய்கறி புளிக் குழம்பு

புளிக் குழம்பில் காய்கறிகள் சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.

[Total: 1    Average: 5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 3-4

பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : காய்கறி
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு

தேவை :
  • புளி – 1" அளவு உருண்டை / பெரிய நெல்லிக்காய் அளவு
  • சின்ன வெங்காயம் – 12 அல்லது 1 வெங்காயம் சிறியது
  • தக்காளி - 1/2
  • பூண்டு - 2 சிறிய பல்லு
  • பச்சை மிளகாய் - 1
  • முருங்கைக்காய் - 1/2
  • கத்திரிக்காய் - 3
  • கேரட் - 1/2
  • சுரைக்காய் - 5௦ கிராம் அல்லது 1/3 நடுத்தர அளவு
  • கொண்டைக்கடலை - 50 கிராம் (விரும்பினால்)
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் - 150 மில்லி
  • வெந்நீர் - 200 மில்லி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
  • உப்பு - சுவைக்கேற்ப

மசாலாத் தூள்::

  • மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
  • மிளகுத் தூள் -1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • மல்லித் தூள் - 3 தேக்கரண்டி

  • செய்முறை :
    1. புளியைக் கழுவி சில நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.
    2. முருங்கைக்காயை 3-4 துண்டுகளாகவும், ஒவ்வொரு கத்திரிக்காயையும் 3-4 துண்டுகளாகவும், கேரட்களை சிறிய துண்டுகளாகவும், சுரைக்காயைபெரிய துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும். கொண்டைக்கடலை சேர்ப்பதானால், அதை 2 மணி நேரம் ஊற வைத்து தனியாக வேக வைத்து கொள்ளவும்.
    3. வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை வெட்டி வைக்கவும். கறிவேப்பிலையை கழுவிக் கொள்ளவும்.
    4. ஊற வைத்த புளியைப் நன்றாக பிழிந்து, புளிக் கரைசலை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
    5. ஒரு பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானதும், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
    6. நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். கொண்டைக்கடலை சேர்ப்பதானால், இப்போ சேர்க்கவும்.
    7. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
    8. புளிக் கரைசல், 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும்.
    9. கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

    குறிப்பு : பருப்பு சுரைக்காய், முட்டைகோஸ் பொரியல் மற்றும் சாதத்துடன் சாப்பிடத் தகுந்தது. ஆம்லெட் புளிக் குழம்பையும் மற்றும் முட்டை புளிக் குழம்பையும் செய்து பார்க்கலாம்.

    ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/tamarind-curry-vegetables


     




     

    Leave a Reply

    Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

    சமையல் குறிப்பை தேடுக
    பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
    அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

    By continuing to use the site, you agree to the use of cookies. more information

    The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

    Close