உளுந்த அடை

மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு. இதை காலை அல்லது இரவு நேர உணவாக சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரங்களிலும் பட்சணமாக செய்யலாம்.

[Total: 1    Average: 3/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

எத்தனை குடுக்கும் : 8 -10
பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : பருப்பு / கடலை
சமையல் குறிப்பு வகை : இரவு உணவு காலை உணவு பட்சணம்

தேவை :
 • 250 கிராம் உளுத்தம் பருப்பு
 • 3 முட்டை
 • 1 வெங்காயம் சிறியது
 • 2 பச்சை மிளகாய்
 • 2 மேசைக்கரண்டி அரிசி மாவு
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • வறுக்க எண்ணெய் 100 மில்லி
 • சுவைக்கேற்ப உப்பு
 • தேவைக்கேற்ப தண்ணீர்

செய்முறை :
 1. 45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
 2. வெங்காயம், மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
 3. ஊற வைத்த பருப்பை மிகவும் குறைந்த தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இது நுரை விட 2-3 மணி நேரம் வரை அவகாசம் விடவும்.
 4. அரைத்த பருப்பு, வெங்காயம், மிளகாய், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் அரிசி மாவை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
 5. வாணலியை அடுப்பில் ஏற்றவும்.ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.
 6. இந்த மாவை ஒரு கைப்பிடி அளவு வாணலியில் விட்டு, சுமாராக 5 இஞ்ச் அளவிற்கு பரவ விடவும். இதை மூடி 2-3 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடவும்.
 7. அதைத் திருப்பி போட்டு, மீண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும். சரியான பதம் வரும் வரை நன்றாக வேக விடவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
 8. இதே செயல்முறையை மாவு தீரும் வரை தொடரவும்.

குறிப்பு : இதை தேங்காய் சட்னிஅல்லது இறால் குழம்புடன்சேர்த்து உண்ணலாம்.

மற்ற பெயர் : Urid Dhal pancake, Uzhundu adai

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/urid-dhal-pancake


 
 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close