ன்ஸ் மற்றும் சிக்கன் உடன் செய்யப்படும் இந்தக் குழம்பு சப்பாத்தி அல்லது நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்
Marination Time :1-2 மணி நேரம் Soaking Time :
Cooking Time :
20-30 நிமிடங்கள்
Ingredients:
எலும்பில்லாத சிக்கன் - 350 கிராம் (சிறு துண்டுகள்)
பச்சை பீன்ஸ் - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம் அல்லது 2
தக்காளி- 150 கிராம் அல்லது 2
இஞ்சி பூண்டு விழுது - 11/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
பட்டை - 1" அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தக்காளி விழுது - 1 தேக்கரண்டி (தேவையென்றால்)
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
ஊறவைக்க:
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
காடி (Vinegar) - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மசாலா பொடிகள்:
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
Method:
ஊறவைக்க குறிப்பிடப்பட்ட பொருட்களை சேர்த்து சிக்கன் துண்டுகளை குறைந்தது 1 மணி நேரத்திற்கு அதில் ஊறவைக்கவும். பச்சை பீன்ஸ், வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும். சூடான நாண் - ஸ்டிக் கடாயில் சிக்கன் சேர்த்து 2 -3 நிமிடங்கள் பொறித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பின்பு அதே கடாயில் பட்டை, வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடங்கள் வறுக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், மசாலா பொடிகள் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளரவும்.
பின்பு, பச்சை பீன்ஸ் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
மேலும் இதனுடன் சிக்கன் துண்டுகள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
பாத்திரத்தை மூடி 5-6 நிமிடங்கள் மிதமான சூட்டில் (கெட்டியாகும் வரை) வேகவிடவும்.
அடிபிடிக்காமல் இருப்பதற்கு 1-2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சமைக்கவும்.