மீன் பிரியாணி
recipe Image
 
மீன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு.
Cooking Time : 1 - 1 1/2 மணி நேரம்

Ingredients:
  • பதமான மீன் - 1 கிலோ (பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் )
  • பாஸ்மதி அரசி - 1 கிலோ அல்லது 4 கப்
  • எண்ணெய் - 125 மி.லி குழம்பிற்கு 25 மி.லி சாதத்திற்கு
  • ஏலக்காய் - 3
  • பட்டை 1" நீட்டமான துண்டு - 2
  • கிராம்பு - 4
  • வெங்காயம் - 450 கிராம் அல்லது 4 பெரியது
  • தக்காளி - 300 கிராம் அல்லது 4
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி-பூண்டு விழுது - 4 டேபில் ஸ்பூன்
  • புதினா இலை நறுக்கியது - 3 டேபில் ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 3 டேபில் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் - 1 டீஸ்பூன்
  • தயிர் - 3 டேபில் ஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன் (விரும்பினால் )
  • எலுமிச்சை சாறு - 15 மில்லி அல்லது 1 டேபில் ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ப

மீன் வறுக்க தேவைப்படும் பொருட்கள்:

  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டேபில் ஸ்பூன்
  • எண்ணெய் - 150 மி.லி
Method:
  1. வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, உப்புடன் மீனை சேர்த்து 10 நிமிடங்களுக்கு உளற வைக்கவும்.

மீன் வறுக்கும் முறை

  1. கடாயை சூடுப்படுத்தி 150 மி.லி எண்ணெயை ஊற்றவும்.
  2. எண்ணெய் சூடானவுடன் மீன் துண்டுகளை சேர்த்து அரைவேக்காடாக வறுக்கவும்.
  3. பிறகு, அதனைத் திருப்பி போட்டு 2-3 நிமிடம் வரை மிதமான சூட்டில் வறுக்கவும்.
  4. கடாயில் இருந்து தனியாக எடுத்து வைக்கவும்.
  5. கீழ் உள்ளதை செய்வதற்கு முன்பு அரிசியை கழுவி 10-15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மசாலா செய்யும் முறை

  1. சூடான பெரிய பாத்திரத்தில் 125 மி.லி எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
  2. பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
  3. மீன் பொறித்த எண்ணெய்யையும் சேர்க்கவும்.
  4. நறுக்கிய வெங்காயத்தை மிதமான சூட்டில் 10-12 நிமிடங்கள் பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
  5. அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  6. பின்னர் தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து 7-8 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  7. இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
  8. மீன் துண்டுகளை போட்டு 2-3 நிமிடங்கள் வேகவைத்து, சட்டியில் இருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

சாதம் செய்யும் முறை

  1. அரிசியை வடித்து எடுத்து கொள்ளவும்.
  2. பெரிய கனமான பாத்திரத்தில் 3-4 லிட்டர் தண்ணீர், 25 மி.லி எண்ணெய், ஏலக்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  3. தண்ணீர் கொதித்தவுடன், அரிசியை சேர்க்கவும் (அரிசி: தண்ணீர்= 1:4).
  4. 4-5 நிமிடங்கள் அல்லது 3/4 பதம் வரும்வரை வேக விடவும்.
  5. அரிசி வெந்தவுடன், தண்ணீரை வடிகட்டி, அரிசியை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

பிரியாணி செய்யும் முறை

  1. மசாலா செய்த பாத்திரத்தில் 300 மி.லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. வேகவைத்த அரிசி, சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து மெதுவாக கிளறவும்.
  3. இருக்கமாக மூடி 15-20 நிமிடங்கள் வேக விடவும்.
  4. மீன் துண்டுகளை மேலாக சேர்க்கவும்.
  5. மீன்டும் இருக்கமாக மூடி 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  6. மீன் பிரியாணி தயார்
Notes:
ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். ரைஸ் குக்கர் இருந்தால் அதில் சமைக்கவும். ஒரு கப் என்பது 250 மி.லி தண்ணீர் பிடிக்கும் அளவு கொண்டது.