சிக்கன் குருமா
recipe Image
 
சிக்கன் குருமா சப்பாத்தி அல்லது பரோட்டாவிற்கு ஏற்ற உணவாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :30 நிமிடங்கள் - 1 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • சிக்கன் – 750 கிராம் - பெரிய துண்டுகளாக வெட்டியது
  • எண்ணெய் - 4 மேசைக் கரண்டி
  • பட்டை - 1" துண்டு
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • வெங்காயம் - 300 கிராம் அல்லது 2 பெரியது
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி-பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
  • தயிர் - 3 மேசைக் கரண்டி
  • முந்திரி பருப்பு பொடியாக்கியது - 2 மேசைக் கரண்டி (விரும்பினால்)
  • தேங்காய்ப்பால் – 250 மி.லி (1 கப்)
  • எலுமிச்சை சாறு – 1 மேசைக் கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

மசாலா பொடிகள்

  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தூள் - 3 தேக்கரண்டி
  • மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
Method:
  1. பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  2. தயிர், உப்பு (1 தேக்கரண்டி), இஞ்சி-பூண்டு விழுது அரை பாகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் கோழி துண்டுகளை ஊற வைக்கவும்.
  3. வெங்காயம், கொத்தமல்லி இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பிரஷர் குக்கர் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  5. பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
  6. நறுக்கிவைத்த வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை நடுத்தர வெப்பத்தில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  7. மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுதை அத்துடன் சேர்த்து வதக்கவும்.
  8. கரம் மசாலா, மிளகுத் தூள், கொத்தமல்லித் தூள், உப்பு மற்றும் கோழி துண்டுகளை சேர்த்து சுமார் 4-5 நிமிடங்களுக்கு மேலும் கிளறவும் .
  9. ¾ கப் தண்ணீர் ஊற்றி, சட்டியை மூடி, விசில் வந்தவுடன், அடுப்பை குறைத்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
  10. தேங்காய் பால், முந்திரி பவுடர் மற்றும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  11. கறியை 4-5 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும்.
  12. எலுமிச்சை சாறை சேர்த்து கொத்தமல்லி இலையுடன் அழகுபடுத்தவும்.
Notes:
பட்டர் ரைஸ் / சப்பாத்தி மற்றும் பரோட்டாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும் . பிரிட்டிஷ் சிக்கன் குருமா செய்ய வேண்டும் என்றால், <a href="/recipes/British-Chicken-Korma"> இங்கே </a> கிளிக் செய்க. சமையல் நேரம் தொடர்பான <a href="/cookingwarning#chicken">எச்சரிக்கை</a>யை தயவு செய்து பார்க்கவும்.