உளுத்தம் பயிறு-பின்டோ பீன்ஸ் மசாலா
recipe Image
உளுத்தம் பயிறு-பின்டோ பீன்ஸ் மசாலா ப்ரோட்டின் சத்து மிக்க சப்பாத்தி சைடு டிஷ்.
Preparation Time : 10 நிமிடங்கள்
Marination Time :ஓர் இரவு முழுவதும் Soaking Time :
Cooking Time : 30-45 நிமிடங்கள்
Serves : 6-8
Ingredients:
• கருப்பு உளுத்தம் பயிறு – 15௦ கிராம் அல்லது 1/2 200 மில்லி டீ கப்
• பின்டோ பீன்ஸ் – 4௦ கிராம் அல்லது 3 மேசைக்கரண்டி நிறைய
• (விரும்பினால்)
• வெங்காயம் – 1 நடுத்தர அளவு
• தக்காளி – 3
• பச்சை மிளகாய் – 1
• இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
• தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி
• எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
• நெய் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
• நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி
• தண்ணீர் – தேவைக்கேற்ப
• உப்பு – சுவைக்கேற்ப
மசாலாக்கள்:
• மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
• மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
• கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
• மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
Method:
1. உளுத்தம் பயிறு மற்றும் பின்டோ பீன்சை ஒரு இரவு ஊற வைத்து வடிக்கவும்.
2. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
3. பிரஷர் குக்கரை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
4. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
6. நறுக்கிய தக்காளி, மிளகாய் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3-4 நிமிடங்கள் கிளறவும்.
7. தக்காளி கூழ் மற்றும் ஊற வைத்த பயிரை சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் மூடி வைக்காமல் சமைக்கவும்.
8. 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் குறைந்த தீயில் 1௦-12 நிமிடங்கள் சமைக்கவும். பிரஷர் அடங்கும் வரை மூடியை திறக்க வேண்டாம்.
9. மசாலாவின் பதத்தை பார்க்கவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நீர்த்து இருந்தால் சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
10. நெய் சேர்த்து கலக்கவும்.
11. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
Notes: