மட்டன் குழம்பு
| |
|
|
பல வீடுகளில் வழக்கமாக சமைக்கப்படும் மட்டன் குழம்பு செய்யும் எளிய முறை இது. |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- எலும்புடன் கூடிய மட்டன் – 6௦௦ கிராம் –
- பெரிய துண்டுகளாக வெட்டியது
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- பட்டை – 3 cm நீள துண்டு
- கிராம்பு – 2
- வெங்காயம் – 2 பெரியது
- தக்காளி – 15௦ கிராம்
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- டின் தேங்காய் பால் – 3 மேசைக்கரண்டி அல்லது
- 200 மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலா தூள்கள்: - மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1&1/2 -2 தேக்கரண்டி
- மிளகு தூள் – 3/4 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
- சீரகத் தூள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
|
Method: |
- அனைத்து வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
- அனைத்து மசாலா தூள்கள் மற்றும் ஆட்டு கறி துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
- 200 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் அடுப்பை வைத்து சட்டியை மூடவும்.
- முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
- டின் தேங்காய் பால் இல்லை எனில் வீட்டில் செய்த தேங்காய் பால் செய்யவும்.
- தேவைப்பட்டால் அதிகம் தண்ணீர் சேர்க்கவும். 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
|
Notes: |
சாதம்/ சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை பிரட்டுடன் சாப்பிட ஏற்றது. கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், முட்டைகோஸ், வெந்தய கீரை, சௌசௌ அல்லது ஏதேனும் ஒரு நீர் காய்கறியை கறி வெந்தவுடன் சேர்த்து 4-5 நிமிடங்கள் பிரஷர் குக்கரில் அல்லது காய் வேகும் வரை சமைக்கவும். பார்க்க <a href=”/Cooking Guidelines#Lamb”target=”_blank”>சமையல் குறிப்பு</a>. |