பொடிக்கறி
| |
|
|
பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- எலும்பில்லாத மட்டன் – 5௦௦ கிராம் – 1-2 cm துண்டுகளாக வெட்டியது
- எண்ணெய் – 4-5 மேசைக்கரண்டி
- பட்டை – 3 cm நீள துண்டு
- கிராம்பு – 2 (விரும்பினால்)
- வெங்காயம் – 100 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1-2 தேக்கரண்டி அலங்கரிக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
அரைக்க வேண்டியவை: - துருவிய தேங்காய் – 4 மேசைக்கரண்டி நிறைய
|
Method: |
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, அதனுடன் தண்ணீரை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யை கடாயில் ஊற்றி சூடாக்கவும். மீதி எண்ணெய்யை கடைசியில் வறுக்க வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- மசாலாத் தூள்கள், மட்டன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
- 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.
- முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து சுமார் 12 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
- அடுப்பை அணைத்து விட்டு, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- ஒரு நான்-ஸ்டிக் வாணலியை சூடாக்கி, மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
- அரைத்த தேங்காய் மற்றும் சமைத்த கறியில் உள்ள தண்ணீரை சேர்க்கவும். மிதமான சூட்டில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். சமைத்த கறியை சேர்க்கவும்.
- குறைந்த சூட்டில் 7-8 நிமிடங்கள் அல்லது படத்தில் உள்ளது போல் சுக்கவாகும் வரை வறுக்கவும். கறி தீயாமல் பார்த்துக் கொள்ளவும்.
- கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரிக்கவும்
|
Notes: |
இது சாதம் மற்றும் <a href="/recipes/sambar">சாம்பார்</a> அல்லது <a href="/recipes/Bisibella-baadh">பிசிபெல்லா பாத்</a> ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும். |