சீயம்
| |
|
|
சீயம்(அ)சுழியான், சிறப்பு தினங்களில் செய்யப்படும் இனிப்புவகை. |
|
Preparation Time : 15-20 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
|
Ingredients: |
உள்ளடம்: - கடலை பருப்பு - 2/3 கப்(250ml கப்) (அ) 125 கிராம்
- வெல்லம் – 175 கிராம்
- ஏலக்காய் – 4
- துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
- சமையல் எண்ணெய் – வறுப்பதற்கு
மாவு: - மைதா – 1/2 கப்(250ml கப்) (அ) 75 கிராம்
- சோடா மாவு – 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவைக்கேற்ப
|
Method: |
- கழுவிய பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஏலக்காய் விதைகளை நன்றாக அரைக்கவும்.
- மைதா மாவு, உப்பு, சோடா மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு தயார் செய்து கொள்ளவும்.
- கடலை பருப்பை தண்ணீரில் நன்றாக வேகும்வரை வேகவைக்கவும்; பிறகு நீரை வடிக்கவும்.
- வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பாவு வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டவும்.
- வேகவைத்த கடலை பருப்புடன் தயார் செய்த பாவு, அரைத்த ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அரை மேசைக்கரண்டி பருப்பு கலவையை எடுத்து 3-செ.மீ அளவு உருண்டையாக நன்றாக உருட்டவும்.
- பாத்திரத்தில் உள்ள அனைத்து பருப்பு கலவையையும் மேலே செய்தவாறு உருண்டைகளாக உருட்டவும்.
- ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்த மாவில் நனைத்து நன்றாக வறுக்கவும்.
- ஒரே சமயம் 4-5 உருண்டைகளை எண்ணெய்யில் வறுக்கவும்
|