மீன் வறுவல் 2
recipe Image
 
பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மீன் பொரித்தால் கவுச்சி இருக்காது.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • மீன் - 1/2 கிலோ (சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்)
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • நுணுக்கிய மிளகு - ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 4 மேசைக்கரண்டி
  • நசுக்கிய பூண்டு - 3 தேக்கரண்டி
  • எண்ணெய் - வறுக்க
Method:
  1. மீனை நன்றாக கழுவி, அதில் மஞ்சள் தூள், நுணுக்கிய மிளகு, நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
  2. கடாயை சூடாக்கி அதில் வறுக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும்.
  3. அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய மீன்களை சேர்த்து மிதமான சூட்டில் 4-5 நிமிடம் வரை வறுக்கவும்.
  4. இதே முறையில் எந்த வகையான மீன்களிலும் செய்யலாம்
Notes:
<a href="/recipes/spicy-fish-fry">இந்த மீன் வறுவலையும்</a> செய்து பார்க்கலாம். தோசை கல்லிலும் மீனை வறுக்கலாம்.