உருளைக்கிழங்கு பொரியல்
recipe Image
 
இந்திய மசாலா பொருட்களுடன் செய்யும் உருளைக் கிழங்கு பொரியல் எல்லாருக்கும் பிடித்தது.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
  • எண்ணெய் - 5 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
  • Method:
    1. உருளை கிழங்கை நன்றாக கழுவி 1 செ.மீ. அளவுக்கு துண்டுகளாக நறுக்கவும்.
    2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் அதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
    3. சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்.
    4. போதுமான அளவு எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு ஒரு நிமிடத்திற்கு தாளிக்கவும்.
    5. நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 3/4 ஸ்பூன் உப்பு ஆகியவற்றை போடவும்.
    6. 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
    7. சட்டியை மூடி வைத்து 7-8 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
    8. உருளைக்கிழங்கு துண்டுகள் சட்டியின் அடியில் ஒட்டிக் கொண்டு தீயாமல் இருக்கும் வகையில் சட்டியை சில முறை திறந்து நன்றாக கிளறி விடவும்.
    9. உருளைக் கிழங்கு வெந்தபின்னர் அவை மொறுமொறுப்பாகும் வகையில் 7-8 நிமிடங்களுக்கு வதக்கவும்.
    10. சட்டியின் அடியில் உருளை கிழங்கு தீயாமல் இருக்க நன்றாக கிளறவும்.
    11. பறிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்
    Notes:
    எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம் மற்றும் தக்காளி சாதத்திற்கு இது தொட்டுக் கொள்ள ஏற்றது.