பிஸ்கட் சிக்கன்
recipe Image
 
சிக்கன் நக்கெட்ஸ் மாதிரி சுவையாகவும் காரமாகவும் இருக்கும்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டவும்)
  • பச்சை மிளகாய் - 6
  • இஞ்சி
  • பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
  • பிரட்தூள் - 250 கிராம்
  • முட்டை - 2
  • எண்ணெய்: 250 மிலி (வறுப்பதற்கு)
Method:
  1. மிளகாயை மிருதுவான விழுதாக அறைத்துக் கொள்ளவும்.
  2. சிக்கனுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் அறைத்த மிளகாய் விழுதை சேர்க்கவும்.
  3. பின்பு கடாயை சூடுபடுத்தி, 4 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும்.
  4. சிக்கன் துண்டுகளை கடாயில் சேர்த்து அதை நன்கு கிளரி, மூடி அதனை 5 நிமிடம் வரை சமைக்கவும்.
  5. பின்பு முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
  6. ஒரு தட்டில் பிரட் தூள்களை எடுத்துக் கொள்ளவும்.
  7. வறுத்த சிக்கன் துண்டுகளை முட்டையில் மற்றும் பிரட்தூளில் நனைத்து எடுத்து, எண்ணெயில் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
  8. மேற்கண்ட முறையில் அடுத்த சிக்கன் துண்டுகளை வறுத்து கொள்ளவும்