பொதுவாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் உளுந்த வடையை வீட்டிலும் செய்து பார்க்கலாம்
Preparation Time : 10-20 நிமிடங்கள்
Marination Time :20-30 நிமிடங்கள் Soaking Time :
Cooking Time :
20-30 நிமிடங்கள்
Ingredients:
உளுந்தம்பருப்பு - 250 கிராம்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
சோடா மாவு - சிறிது
வெங்காயம் - 1 (சிறியதாக)
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சித் துண்டுகள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1 (தேவைப்பட்டால்)
எண்ணெய் - 300 மில்லி (வறுப்பதற்கு)
தண்ணீர் - தேவையான அளவு
Method:
உளுந்தம்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி சுமார் அரைமணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை நுண்ணிய துண்டுகளாக்கிக் கொண்டு, மிளகை பொடி செய்து கொள்ளவும். கறிவேப்பிலையை சிறிதாக பிய்த்துக் கொள்ளவும்.
உப்பு, சோடா மாவு சேர்த்து, சிறு தண்ணீர் விட்டு உளுந்தம்பருப்பை நுரைக்கும் வரை நன்றாக அரைக்கவும்.
பின்னர் அந்த மாவை வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் போடவும்.
அரிசி மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய், இஞ்சி மற்றும் மிளகுப் பொடியை கலந்து நன்றாக கலக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கையை ஈரப்படுத்திக் கொள்ளவும்
ஒன்றரை ஸ்பூன் மாவை எடுத்து அதைத் தட்டையாக தட்டி நடுவில் துளை போடவும்.
சூடான எண்ணெயில் அதைப் போட்டு பொறிக்கவும. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 வடைகளை செய்யலாம்.
இதே போல் அனைத்து மாவையும் செய்யவும்.
சுவையான மெதுவடை சாப்பிடுவதற்கு தயார்
Notes:
<a href="/recipes/coconut-chutney">தேங்காய் சட்னி</a>
தொட்டுக் கொண்டு வடையை சாப்பிடுவது சுவையாக இருக்கும்.