காளிஃபிளவர் கேரட் பட்டாணி குருமா
| |
|
|
காளிஃபிளவர், கேரட் மற்றும் பட்டாணி குருமா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாகும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
4-5
|
Ingredients: |
- காளிஃபிளவர் - 250 கிராம் அல்லது 1 சிறியது
- கேரட் - 150 கிராம் அல்லது 1 நடுத்தர அளவு
- பட்டாணி - 150 கிராம்
- வெங்காயம் - 1 நடுத்தர அளவு
- இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- தயிர் - 1 டேபில் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 மிதமான காரத்திற்கு அல்லது 3 அதிக காரத்திற்கு
- பட்டை - 1 அங்குல நீளம்
- கிராம்பு - 1
- முந்திரி - 30 கிராம்
- சோம்பு - 3/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- கசகசா - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கு
|
Method: |
- காளிஃபிளவரை தனித்தனி பூக்களாக வெட்டிக் கொள்ளவும். கேரட்டை 1 சென்டிமீட்டர் அளவுக்கு துண்டுகளாக நறுக்கவும்.
- வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டவும்.
- முந்திரி மற்றும் கசகசாவை 5-10 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
- சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.
- பட்டை, கிராம்பு மற்றும் வெங்காயம் சேர்க்கவும். 4 - 5 நிமிடங்களுக்கு வதக்கவும். சட்டியிலிருந்து அவற்றை எடுத்து ஆற வைத்து அரைக்கவும்.
- அதே சட்டியில் இன்னொரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.
- போதுமான அளவு சூடானவுடன் கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
- அரைத்த விழுது, மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் அதில் சேர்த்து, 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- சோம்பு, கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் மூடிவைத்து சமைக்கவும்.
- முந்திரி மற்றும் கசகசாவை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- இதை சமைத்த காய்கறியில் சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- கறிவேப்பிலை போட்டு அலங்கரிக்கவும்.
|
|