பருப்பு சாதம்
recipe Image
 
பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :10-20 நிமிடங்கள் Soaking Time :

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • பாசுமதி அரிசி - 400 கிராம்
  • பாசிப்பருப்பு - 125 கிராம்
  • எண்ணெய் - 3 tblsp
  • பட்டை - 1 சிறியது
  • ஏலக்காய் - 1 (தேவைப்பட்டால்)
  • கிராம்பு - 2
  • வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • புதினா - 1 கொத்து
  • நெய்/வெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
Method:
  1. வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்,
  2. அரிசி மற்றும் பருப்பை ஒரு பெரிய பாத்திரத்தில் 10-15 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
  3. சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தி அதில் எண்ணெய் விடவும்.
  4. பட்டை மற்றும் கிராம்பை அதில் போட்டு வறுக்கவும்.
  5. வெங்காயம், மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மற்றும் புதினாவை போட்டு 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. தக்காளி, அரிசி மற்றும் பருப்பை அதில் போட்டு 3-4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  7. பின்னர் 950 மில்லி தண்ணீரை அதில் ஊற்றி உப்பை போடவும்.
  8. தண்ணீர் கொதிக்க துவங்கும்போது அடுப்பின் வேகத்தை தணிக்கவும்.
  9. சட்டியை மூடி வைத்து 15-20 நிமிடங்களுக்கு அல்லது தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும். ரைஸ் குக்கர் இருந்தால் அதில் சமைக்கவும்.
Notes:
<a href="/recipes/burtha">புர்தா </a>, Raitha and <a href="/recipes/prawns-masala">இறால் மசாலா</a>/<a href="/recipes/Chicken-Shaerwa">சிக்கன் ஷேர்வா </a>/<a href="/recipes/Lamb-Mutton-Masala">ஆட்டுக்கறி மசாலா </a> ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.