பர்த்தா
| |
|
|
கத்திரிக்காயை சுட்டு செய்யும் இந்த டிஷ் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளக் கூடிய சுவையான உணவாகும்.
|
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
4-5
|
Ingredients: |
- கத்திரிக்காய் - 300 கிராம்
- தக்காளி - 250 கிராம் அல்லது 4 சிறியது
- வெங்காயம் - 200 கிராம் அல்லது 2 சிறியது
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு - 3 பல்
- இஞ்சி - 1/2 இஞ்ச் நீளம்
- 1 இஞ்ச் அகலமுள்ள துண்டு
- பட்டாணி - ஒரு கை அளவு (விரும்பினால்)
- தக்காளி பூரி (Puree) - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தழை - 2 கொத்து
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மசாலா பொடிகள் - மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
|
Method: |
- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
- கத்திரிக்காய்களை அடுப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளவும் அல்லது மைக்ரோவேவ் அவனில் 10 நிமிடங்களுக்கு சூடு செய்து கொள்ளவும்.
- கத்திரிக்காயை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- குக்கரை சூடு செய்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.
- வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கத்திரக்காயை சேர்த்து மேலும் 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- கரம் மசாலாவைத் தவிர அனைத்து மசாலா பொடி வகைகள் மற்றும் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 7-8 நிமிடங்கள் வேக விடவும்.
- இறுதியில் பச்சைப் பட்டாணி மற்றும் கரம் மசாலா சேர்த்து 1-2 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- கொத்தமல்லி தழைகளை சிறிதாக வெட்டி தூவி அலங்கரிக்கவும்.
|
Notes: |
இது சப்பாத்தி மற்றும் கோதுமை பிரட்டுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். |