வெஜிடபிள் பிரியாணி
| |
|
|
அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து |
|
Preparation Time : 20-30 நிமிடங்கள்
|
Cooking Time :
1 - 1 1/2 மணி நேரம்
|
Ingredients: |
- 1 கிலோ பாசுமதி அரிசி
- 250 கிராம் அல்லது 1 பெரிய உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கப்பட்ட)
- 100 கிராம் அல்லது 1 நடுத்தர அளவு கேரட் (பெரிதாக நறுக்கப்பட்ட)
- 100 கிராம் பட்டாணி
- 100 கிராம் நறுக்கிய பீன்ஸ்
- 100 கிராம் காலிஃபிளவர் பூக்கள்
- 100 கிராம் பட்டர் பீன்ஸ் (விரும்பினால்)
- 1/2 நடுத்தர அளவு பீட்ரூட்
- 1/2 நடுத்தர அளவு காப்சிகம்
- 250 மில்லி எண்ணெய்
- 4 மேசைக் கரண்டி தயிர்
- 450 கிராம் அல்லது 3 பெரிய வெங்காயம்
- 400 கிராம் அல்லது 6 தக்காளி
- 6-8 பச்சை மிளகாய்
- 4 மேசைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
- 4 மேசைக்கரண்டி நறுக்கிய புதினா இலை
- 4 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
- 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
- 2" நீட்டமான இலவங்கப்பட்டை துண்டு
- 2 ஏலக்காய்
- 2-3 கிராம்பு
- 2 மேசைக்கரண்டி நெய்
- 1 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு
- தேவைக்கேற்ப தண்ணீர்
|
Method: |
- வெங்காயம், தக்காளி, மிளகாய், காய்கறிகள் மற்றும் இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
- 7-8 லிட்டர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கி, எண்ணெய் முழுவதையும் சேர்க்கவும்.இலவங்கம், கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு மிதமான சூட்டில் வைத்து, சுமார் 10-12 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து சுமார் 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பட்டாணி தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் அதில் போட்டு சுமார் 8-10 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து 6-8 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அரிசியை வடிகட்டி, காய்கறிப் பாத்திரத்தில் சேர்க்கவும்.
- சட்டியில் சுமார் 2.2 லிட்டர் தண்ணீரை இதில் சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதில் 2 தேக்கரண்டி நெய் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
- சட்டியை நன்றாக மூடி சுமார் 25-30 நிமிடங்களுக்கு சமைக்கவும்
- அடுப்பை அணைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் பட்டாணியைச் சேர்க்கவும்
- அரிசி பதமானவுடன் அடுப்பை அனைக்கவும்
- பிரியாணி சாப்பிடத் தயார்
|
|