சிக்கன் பீன்ஸ் மசாலா
recipe Image
 
ன்ஸ் மற்றும் சிக்கன் உடன் செய்யப்படும் இந்தக் குழம்பு சப்பாத்தி அல்லது நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :1-2 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • எலும்பில்லாத சிக்கன் - 350 கிராம் (சிறு துண்டுகள்)
  • பச்சை பீன்ஸ் - 150 கிராம்
  • வெங்காயம் - 150 கிராம் அல்லது 2
  • தக்காளி- 150 கிராம் அல்லது 2
  • இஞ்சி பூண்டு விழுது - 11/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
  • பட்டை - 1" அளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • தக்காளி விழுது - 1 தேக்கரண்டி (தேவையென்றால்)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவைக்கேற்ப

ஊறவைக்க:

  • இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • காடி (Vinegar) - 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - 1/2 தேக்கரண்டி

மசாலா பொடிகள்:

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
Method:
  1. ஊறவைக்க குறிப்பிடப்பட்ட பொருட்களை சேர்த்து சிக்கன் துண்டுகளை குறைந்தது 1 மணி நேரத்திற்கு அதில் ஊறவைக்கவும். பச்சை பீன்ஸ், வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும். சூடான நாண் - ஸ்டிக் கடாயில் சிக்கன் சேர்த்து 2 -3 நிமிடங்கள் பொறித்து எடுத்து தனியாக வைக்கவும்.
  2. பின்பு அதே கடாயில் பட்டை, வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடங்கள் வறுக்கவும்.
  3. அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், மசாலா பொடிகள் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளரவும்.
  4. பின்பு, பச்சை பீன்ஸ் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  5. மேலும் இதனுடன் சிக்கன் துண்டுகள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
  6. பாத்திரத்தை மூடி 5-6 நிமிடங்கள் மிதமான சூட்டில் (கெட்டியாகும் வரை) வேகவிடவும்.
  7. அடிபிடிக்காமல் இருப்பதற்கு 1-2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சமைக்கவும்.
  8. கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.