மிளகாய் சட்னி
| |
|
|
மிளகாய் சட்னி இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
Serves :
5-6
|
Ingredients: |
- தக்காளி பெரியது - 1
- வெங்காயம் - 100 கிராம் அல்லது 1 சிறியது
- காய்ந்த சிவப்பு மிளகாய் - 8-10
- பூண்டு - 6-7 துண்டுகள்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
|
Method: |
- தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- பூண்டு தோலை உரித்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் பூண்டை சட்னியாக அரைக்கவும்
- சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்
- கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
- அரைத்த சட்னி மற்றும் உப்பை சேர்த்து 4-5 நிமிடங்கள் சட்னியை சூடுபடுத்தவும்
|