நெய் சாதம்
recipe Image
 
சின்ன சின்ன விஷேசங்களின் போது செய்யக்கூடிய உணவு .
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • பாஸ்மதி அரிசி - 750 கிராம் அல்லது 3 கப்
  • எண்ணெய் - 100 மி.லி அல்லது 6 டேபில் ஸ்பூன்
  • பட்டை 1" நீட்டமான துண்டு - 1
  • ஏலக்காய் - 1 (விரும்பினால் )
  • கிராம்பு - 2
  • வெங்காயம் - 150 கிராம் அல்லது 1 பெரியது
  • தக்காளி - 75 கிராம் அல்லது 1
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • நறுக்கிய கொத்துமல்லி இலை - 1 டேபில் ஸ்பூன்
  • நறுக்கிய புதினா இலை- 1 டேபில் ஸ்பூன்
  • நெய் அல்லது வெண்ணெய் - 2 டீஸ்பூன் அல்லது 10 கிராம்
  • தண்ணீர் - தேவையான அளவு
Method:
  1. வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்துமல்லி இலை மற்றும் புதினா தழைகளை நறுக்கிக் கொள்ளவும்.
  2. அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி 10 நிமிடங்களுக்கு ஊறவைத்து வடிகட்டவும்.
  3. சட்டியை அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தி அதில் எண்ணெய் விடவும்.
  4. பட்டை மற்றும் கிராம்பை போட்டு வறுக்கவும்.
  5. வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை போட்டு 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது அதில் போட்டு நன்று வதக்கவும்.
  7. பின்னர் அரிசியை அதில் போட்டு 4-5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  8. 1 லிட்டர் 150 மி.லி(4 கப் மற்றும் 2/3 கப் ) தண்ணீர் விட்டு உப்பு போடவும்.
  9. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பில் தீயின் வேகத்தை குறைத்து, மூடிவைத்து 15 -20 நிமிடங்களுக்கு அல்லது தண்ணீர் வற்றும் வகையில் வேக வைக்கவும்
Notes:
இங்கு குறிப்பிட்டுள்ள தண்ணீர் அளவு ஒரு வழிகாட்டுதல் மட்டுமே! எந்த விதமான அரிசி மற்றும் பழயதா அல்லது புதியதா என்பதை பொருத்தே தண்ணீர் அளவை நிர்ணயிக்க முடியும். இதில் பட்டாணி, காளான் போன்ற காய்கறிகளை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். பட்டை சேர்க்கும் நேரத்தில் 2 டீஸ்பூன் சீரகம் சேர்த்தால் சீரக சாதமாகிவிடும்.