பீட்ரூட் மட்டன் மசாலா
| |
|
|
பீட்ரூட் மட்டன் மசாலா என்பது, ஆட்டுக்கறியுடன் பீட்ரூட்டை சேர்த்து செய்யும் புரத சத்து மிக்க சத்தான உணவாகும். ஆட்டுக்கறியின் வாசம் பீட்ரூட்டில் சார்ந்து பீட்ரூட் சுவையாக இருக்கும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- ஆட்டிறைச்சி - 500 கிராம்
- பீட்ரூட் - 1 பெரியது அல்லது 2 நடுத்தர அளவு
- வெங்காயம் – 250 கிராம்
- தக்காளி - 3
- இஞ்சி
- பூண்டு - 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1 (விருப்பமானால்)
- பட்டை – 1” நீண்ட துண்டு
- கொத்தமல்லி இலைகள் - சில
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி மற்றும் 1-2 தேக்கரண்டி கடைசியில் சேர்க்க
- உப்பு - சுவைக்கு
- தண்ணீர் – தேவையான அளவு
மசாலாப் பொடிகள்: - மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
|
Method: |
- 2 செ.மீ க்யூப்களாக பீட்ரூட்டை வெட்டவும். வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கர் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும்.
- 2-3 நிமிடங்கள் பீட்ரூட் சேர்த்து, வதக்கவும். பாத்திரத்தில் இருந்து நீக்கி, ஒரு பக்கமாக வைக்கவும்.
- பாத்திரத்தில் பட்டை மற்றும் வெங்காயம் சேர்க்கவும். சுமார் 4-5 நிமிடங்கள் அவற்றை வறுக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கியத் தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்; 2-3 நிமிடங்கள் கிளறவும்.
- ஆட்டிறைச்சி துண்டுகளை சேர்த்து, கிளறி 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
- மூடியிட்டு, மிதமான வெப்பத்தில் பிரஷர் குக்கரில் சமைக்கவும். முதல் விசிலிற்குப் பிறகு, வெப்பத்தை குறைத்து, 12-14 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். பிரஷர் போனதும் மூடியைத் திறக்கவும்.
- பீட்ரூட் சேர்த்து, கிளறவும்.
- மூடியிட்டு, மிதமான வெப்பத்தில் பிரஷர் குக்கரில் மீண்டும் சமைக்கவும். 2 விசிலிற்குப் பின்னர் அடுப்பினை அணைக்கவும். பிரஷர் போனதும் மூடியைத் திறக்கவும்.
- மிதமான வெப்பத்தில் இன்னும் சில நிமிடங்கள், சாறு அடர்த்தியாகும் வரைக் குழம்பினை கொதிக்கவிடவும். குழம்பு பாத்திரத்தின் கீழே ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 1-2 தேக்கரண்டி எண்ணெயைச் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
இந்த உணவு சாதம்/சப்பாத்தி/நா ண் ஆகியவற்றுக்கு நல்ல சுவை கொடுக்கும். மாறுபாட்டிற்கு, <a href="/recipes/Spinach-Lamb-curry">கீரை ஆட்டுக்கறி மசாலா </a> அல்லது <a href="/recipes/Potato-Mutton-masala">உருளைக்கிழங்கு ஆட்டுக்கறி மசாலா </a> ஆகியவற்றை முயற்சிக்கவும். தயவுசெய்து <a href="/CookingGuidelines#Lamb" target="_blank">சமையல் எச்சரிக்கை</a>யைப் பார்க்கவும். |
|