பிஸிபெலாபாத் (சாம்பார் சாதம்)
| |
|
|
இது ஒரு தென்னிந்திய வகை சாதம். பருப்பு, காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் சேர்த்து எளிமையாக தயாரிக்கப்படும் இந்த சாதத்தை சுடசுட சாப்பிட பலருக்கும் பிடிக்கும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
|
Ingredients: |
- வேகவைத்த சாதம் - 5 கப்
- துவரம் பருப்பு - 150 கிராம் அல்லது 3/4 கப்
- சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்)- 75 கிராம் அல்லது 12-14
- பூண்டு - 1 பல்
- தக்காளி - 1 சிறியது
- முள்ளங்கி - 50 கிராம் அல்லது 1/4 நடுத்தர அளவு
- முருங்கைக்காய் - 1/2
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- வறுத்து நுணுக்கிய தனியா தூள் - 1 டீஸ்பூன்
- நெய் -3 டீஸ்பூன்
- புளி - 1/2 நெல்லிக்காய் அளவு
- சுடு நீர் - 150 மி.லி
- எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 1
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- தண்ணீர் - தேவைக்கேற்ப
|
Method: |
- துவரம்பருப்பினை நீர் விட்டு அலசி குக்கரில் மஞ்சள் தூள், பூண்டு தண்ணீர் விட்டு 3 விசில் வரை வேகவிடவும்.
- முருங்கக்காயை 4-5 துண்டுகளாக நறுக்கவும்.
- இதே போல் முள்ளங்கி, வெங்காயம் மற்றும் தக்காளியை தடிமனாக நறுக்கவும்.
- காய்கறிகளை வேகவைத்த பருப்புடன் சேர்த்து ஒரு விசில் வரை வேக விடவும்.
- புளியை அலசி சுடு நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் அதனை நன்கு கரைத்து புளித் தண்ணீர் எடுத்து, வடிகட்டி ஒரு பக்கமாக வைக்கவும்.
- சாதத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு குழைய வேக விடவும்.
- அடுப்பில் சிறிய கடாயை வைத்து எண்ணெய் விடவும்.
- காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- இதனுடன் தனியா தூள், சாம்பார் பொடி, மிளகாய் தூள் மற்றும் புளி தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இந்த கலவையை வேக வைத்த பருப்பு மற்றும் காய்கறி கலவையுடன் சேர்க்கவும்.
- இதனுடன் வேகவைத்த சாதம், நெய் சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலை தூவி கிளறி பரிமாறவும்.
|
Notes: |
<a href="/recipes/Prawn-fry">இறால் வறுவல்</a>/<a href="/recipes/Spicy-Fish-Fry">ஃபிஷ் ஃபிரை </a> /<a href="/recipes/Lamb-coconut-fry">பொடிக்கறி</a> ஆகியவற்ற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். |