தேங்காய்ப்பால் கோழி ஆனம்
| |
 |
|
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- சிக்கன் - 500 கிராம்
- எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
- பட்டை - 1" துண்டு
- கிராம்பு - 3-4
- வெங்காயம் - 300 கிராம் அல்லது 3 நடுத்தர அளவு
- பச்சை மிளகாய் - 3 for மிதமான காரத்திற்கு அல்லது 4 அதிக காரத்திற்கு
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தேங்கய்ப்பால் - 1 கப் (250மி.லி)
- எலுமிச்சை சாறு - 2 மேசைக் கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 மேசைக் கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
மசாலா பொடிகள் - மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகுத் தூள் – 3/4 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 1 1/4 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
|
Method: |
- வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய் பாலை தயாரிக்கவும்.
- கோழி துண்டுகளை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- அடுப்பில் 3-4லிட்டர் பிரஷர் குக்கர் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானவுடன், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- நறுக்கியெடுத்த வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை கிளறவும்.
- மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
- அனைத்து மசாலா பொடிகளையும் மற்றும் கோழி துண்டுகளையும் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும்.
- கடாயில் சுமார் 1/2 கப் தண்ணீரை சேர்க்கவும்.
- குக்கரை மூடிவிட்டு மிதமான வெப்பத்தில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை குறைத்து மேலும் 3-4 நிமிடங்களுக்கு கோழிக்கறியை வேக வைக்கவும்.
- தேங்காய் பாலை சேர்த்து,மீண்டும் 3-4 நிமிடங்களுக்கு ஒரு நடுத்தர வெப்பத்தில் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அழகுபடுத்தவும்.
|
Notes: |
குஞ்சுக்கோழிக்கறியில் செய்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி மற்றும் பரோட்டா உடன் சாப்பிடுவதற்கு ஏற்றது. எப்பொழுதும் செய்யும் கோழி குழம்பு செய்ய <a href="/recipes/chicken-curry">இங்கே</a> கிளிக் செய்யவும். சமையல் நேரம் தொடர்பான <a href="/cookingwarning#chicken">எச்சரிக்கை</a>யை தயவு செய்து பார்க்கவும். |