முட்டை மசாலா
| |
|
|
முட்டை மசாலா, நெய் சாதம்/குஸ்கா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
|
Ingredients: |
- முட்டை – 4
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- பட்டை – 3cm நீளத் துண்டு
- கிராம்பு – 2
- வெங்காயம் – 150 கிராம் அல்லது 1 (பெரியது )
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
|
Method: |
- வெங்காயம், மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தலையை நறுக்கிக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
- கொதிக்கும் நீரில் முட்டையை 7-8 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, குளிர்ந்த நீரில் முட்டைகளை குளிர்விக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் கொதித்தவுடன், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- வெங்காயம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை எண்ணெயில் இருந்து தனியே எடுத்து வைக்கவும். அவை ஆறியவுடன், அவற்றுடன் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- கடாயை மீண்டும் சூடாக்கி, மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வறுக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- அரைத்த தேங்காய் விழுது, உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். கடாயை மூடி மசாலாவை 4-5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- முட்டை குளிர்ந்தவுடன், அவற்றின் ஓடை நீக்கி 2-3 கீறல் கீறி கடாயில் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி முட்டை மசாலாவை சூடாக பரிமாறவும்.
|
Notes: |
<a href="/recipes/tamarind-rice">புளி சாதம்</a>, <a href="/recipes/Ghee-Butter-Rice">நெய் சாதம்</a>,குஸ்கா அல்லது <a href="/recipes/coconut-milk-rice">தேங்காய்ப்பால் சாதம்</a> ஆகியவற்றுக்கு ஏற்றது. இதையே கொஞ்சம் ஜாஸ்தி தண்ணீர் ஊற்றி செய்தால் குழம்பாகவும் சாப்பிடலாம். |
|