வறுத்த அவித்த முட்டை
| |
|
|
இந்திய மசாலாத் தூளோடு அவித்த முட்டையை வறுத்தால் சுவையே தனி. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- முட்டை ( நடுத்தர அளவு ) –4
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- உப்பு – சுவைக்கேற்ப
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி ( வாசனைக்காக )
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- தண்ணீர் – முட்டையை வேகவைக்க
|
Method: |
- ஒரு பாத்திரத்தில் முட்டைகளை 8-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- பிறகு,அவற்றைக் குளிர வைத்து ஓட்டை நீக்கவும். ஒவ்வொரு முட்டையையும் பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடாக்கி, அதில் எண்ணெய் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்.
- முட்டையின் இரு பக்கத்தையும் வறுத்தவுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து அலங்கரிக்கவும்.
|