குடை மிளகாய் குழம்பு
recipe Image
 
இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.
Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:

    ஸ்ட்ஃபிங்:

    • குடைமிளகாய் (Capsicum) - 4 சிறியவை / 3 நடுத்தர அளவு
    • 1 கேரட்
    • 2 உருளைக்கிழங்கு
    • 100 கிராம் கைமா (கொத்து இறைச்சி ) அல்லது இறால் அல்லது பச்சைப் பட்டாணி
    • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
    • 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
    • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
    • 1/4 தேக்கரண்டி சீரகத் தூள்
    • 1 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
    • 1 மேசைக்கரண்டி எண்ணெய்

    குழம்பு:

    • 1/2 இஞ்ச் இலவங்கப் பட்டை
    • 2-3 கிராம்பு
    • 150 கிராம் வெங்காயம்
    • 1 தக்காளி
    • 2 பச்சை மிளகாய்
    • 1/2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
    • 1/4 தேக்கரண்டி மஞ்சள்த் தூள்
    • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
    • 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்
    • 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
    • 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
    • 200 மில்லி தேங்காய்ப் பால்
    • 3 மேசைக் கரண்டி எண்ணெய்
    Method:

      ஸ்டஃபிங்:

      1. கேரட் மற்றும் உருளைக் கிழங்கை நன்றாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றைக் கழுவி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும்.
      2. ஒரு வாணலியை மிதமான சூட்டில் சூடாக்கி, 1 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானவுடன் அதில் மஞ்சள்த் தூள், மிளகாய்த் தூள் மற்றும் இஞ்சிப் பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும்.
      3. பிறகு இறைச்சி/ இறால் /பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்கவும்.
      4. சமைத்த காய்கறிகள், உப்பு மற்றும் சீரகப் பொடியை ஒன்றாகப் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
      5. நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு, இதை ஆற விடவும்.

      குழம்பு செய்முறை:

      1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பிறகு அரை மூடித் தேங்காயிலிருந்து தேங்காய்ப் பால் தயார் செய்து கொள்ளவும்.
      2. 2 லிட்டர் அளவுள்ள பாத்திரத்தை மிதமான சூட்டில் சூடாக்கவும்.
      3. மீதமுள்ள எண்ணெயை சட்டியில் ஊற்றவும். எண்ணெய் சூடான பின், பட்டை
      4. மற்றும் கிராம்பை சேர்த்து வறுக்கவும்.
      5. நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
      6. தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்த தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் மற்றும் கொத்தமல்லித் தூளை இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். இதை நன்றாகக் கலக்கி, ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
      7. தேங்காய்ப் பாலை ஊற்றவும்.
      8. குடைமிளகாயை நன்றாகக் கழுவி, அதன் காம்பை நீக்கி தலையை சீவி விதைகளை நீக்கவும். இதில் மேலே தயார் செய்த ஸ்ட்ஃபிங் கொண்டு நிரப்பவும்.
      9. குழம்பு கொதிக்கும் போது, இந்த அடைக்கப்பட்ட குடைமிளகாயை குழம்பில் சேர்த்து, சட்டியை மூடி 7-8 நிமிடம் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
      10. கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
      Notes:
      குழம்பு மிகவும் தண்ணியாக இருந்தால், 6-8 முந்திரிகளை அரைத்து 2 கரண்டி தண்ணீரில் கலந்து உள்ளே ஊற்றவும்.