தக்காளி சாதம்
| |
|
|
சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
|
Ingredients: |
- 3 கப் சமைத்த சாதம்
- 2 மேசைக் கரண்டி நறுக்கிய வெங்காயம்
- 4 தக்காளி
- 3 மேசைக் கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு (விரும்பினால்)
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 காய்ந்த மிளகாய்
- 1 மேசைக்கரண்டி கடலைப் பருப்பு (விரும்பினால்)
- 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- மிதமான காரத்திற்கு 1/2 தேக்கரண்டி அல்லது அதிக காரத்திற்கு 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
- 1/2 தேக்கரண்டி சோம்பு (விரும்பினால்)
- 1 தேக்கரண்டி தக்காளிக் கூழ் (puree) (விரும்பினால்)
|
Method: |
- வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பு சேர்க்க விரும்பினால் 1/2 தேக்கரண்டி சோம்பை அரைத்து கொள்ளவும்.
- சமைத்த சாதம் ஆறி இருந்தால் சூடு படுத்திக் கொள்ளவும். அதை கலக்குவதற்கு வசதியாக அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
- 1 லிட்டர் அளவு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.
- மஞ்சள்த் தூள், மிளகாய்த் தூள், சோம்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்க்கவும். சாதம் சற்று புளிப்பாக இருக்க விரும்பினால், சிறிது தக்காளி கூழ் சேர்க்கவும்.
- எண்ணெய் தனியாக பிரிந்து, தக்காளி நன்றாக வேகும் வரை நன்றாக வதக்கி,அடுப்பை அணைக்கவும்.
- இந்த கலவையை சமைத்த சாதத்தில் சேர்த்து,நன்றாக கலக்கவும்.
- சுவையான தக்காளி சாதம் தயார்.
|
Notes: |
இதை <a href="/recipes/Potato-fry">உருளைக் கிழங்கு பொரியல்</a>, <a href="/recipes/fried-boiled-egg”>வறுத்த அவித்த முட்டை</a>, சிக்கன் 65, <a href="/recipes/Prawns-fry">இறால் வறுவல்</a> அல்லது <a href="/recipes/Spicy-fish-fry">மீன் வறுவல்</a>ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். |
|