உளுந்த அடை
| |
|
|
மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு. இதை காலை அல்லது இரவு நேர உணவாக சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரங்களிலும் பட்சணமாக செய்யலாம். |
|
Preparation Time : 10-15 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
|
Ingredients: |
- 250 கிராம் உளுத்தம் பருப்பு
- 3 முட்டை
- 1 வெங்காயம் சிறியது
- 2 பச்சை மிளகாய்
- 2 மேசைக்கரண்டி அரிசி மாவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- வறுக்க எண்ணெய் 100 மில்லி
- சுவைக்கேற்ப உப்பு
- தேவைக்கேற்ப தண்ணீர்
|
Method: |
- 45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- வெங்காயம், மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
- ஊற வைத்த பருப்பை மிகவும் குறைந்த தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இது நுரை விட 2-3 மணி நேரம் வரை அவகாசம் விடவும்.
- அரைத்த பருப்பு, வெங்காயம், மிளகாய், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் அரிசி மாவை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் ஏற்றவும்.ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.
- இந்த மாவை ஒரு கைப்பிடி அளவு வாணலியில் விட்டு, சுமாராக 5 இஞ்ச் அளவிற்கு பரவ விடவும். இதை மூடி 2-3 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடவும்.
- அதைத் திருப்பி போட்டு, மீண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும். சரியான பதம் வரும் வரை நன்றாக வேக விடவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- இதே செயல்முறையை மாவு தீரும் வரை தொடரவும்.
|
Notes: |
இதை <a href="/recipes/coconut-chutney">தேங்காய் சட்னி</a>அல்லது <a href="/recipes/prawn curry">இறால் குழம்புடன்</a>சேர்த்து உண்ணலாம். |