மோர்க் குழம்பு
recipe Image
 
சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • 350கிராம் தயிர்
  • சின்ன வெங்காயம் – 10-12 அல்லது 1 வெங்காயம் சிறியது
  • 1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1-2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 7-8 கருவேப்பிலை
  • 100 கிராம் வெண்டிக்காய் / சேப்பங் கிழங்கு
  • தேவையான அளவு தண்ணீர்
  • சுவைக்கேற்ப உப்பு
  • அரைக்கப்பட வேண்டிய பொருட்கள்:
  • 1 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
  • 2 காய்ந்த மிளகாய்
Method:
  1. கடாயை மிதமான சூட்டில் வைத்து, 1 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
  2. கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து தகதகப்பான பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். இதை நன்றாக அரைத்து வழவழப்பான விழுதாக்கி கொள்ளவும்.
  3. மூன்றுக்கு நான்கு (3/4) என்ற அளவில் தயிரை எடுத்து அரைத்த கலவையுடன் கலந்து தனியாக வைத்து விடவும்.
  4. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கருவேப்பிலையை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.தேவையான அளவு இஞ்சியை நசுக்கிக் கொள்ளவும்.
  5. ஒவ்வொரு வெண்டைக் காயையும் மும்மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  6. வெண்டிக்காயக்குப் பதிலாக சேப்பங்கிழங்கைப் பயன்படுத்துவதாக இருந்தால், இவற்றைத் தனியாக உப்பு மற்றும் நீரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை உரித்து, ஒவ்வொன்றையும் 2 - 3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  7. இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும். சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு வறுக்கவும்.
  8. நசுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.பிறகு காய்கறிகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
  9. பிறகு மஞ்சள் தூள், கலக்கி வைத்த மோர் மற்றும் உப்பு சேர்த்து 5-6 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும்.
  10. தயிர்க் கலவை மற்றும் சிறிது தண்ணீர் இத்துடன் சேர்த்து கலக்கவும். இளஞ்சூட்டில் சில நிமிடங்கள் வரை வைக்கவும். அடர்த்தியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும்.
Notes:
சாதத்திற்கு ஏற்ற சுவையான உணவு. மாற்றத்திற்கு <a href="/recipes/Tamarind-vegetable-curry">புளிக் குழம்பு</a>அல்லது <a href="/recipes/Garlic-curry">பூண்டுக் குழம்பு</a>-ஐச் செய்து பார்க்கலாம். இதை குறுக்கு வழியில் செய்ய <a href="/recipes/easy-curd-curry">மோர்க் குழம்பு 02</a>-ஐ கிளிக் செய்யவும்.