தேங்காய் பால் சாதம்
recipe Image
 
தேங்காய் பால் சாதம் விஷேசங்களுக்கு ஏற்ற சாத வகை.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • பாசுமதி அரிசி – 75௦ கிராம்
  • எண்ணெய் – 9௦ மில்லி (ஒவ்வொரு 25௦ கிராம் அரிசிக்கு 3௦ மில்லி எண்ணெய்)
  • பட்டை – 1/2 inch நீள துண்டு
  • வெந்தயம் -1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 15௦ கிராம்
  • பிரியாணி இலை – 2-3
  • பூண்டு- 6-7 சிறிய பல்லு
  • கெட்டியான டின் தேங்காய் பால் – 6 மேசைக்கரண்டி அல்லது 2௦௦ மில்லி
  • வீட்டில் செய்த தேங்காய் பால்
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கிக்கொள்ளவும். அரிசியை அலசி 1௦ நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிக்கவும்.
  2. ஒரு நீண்ட கைப்பிடி கொண்ட 3 லிட்டர் பாத்திரத்தில் மிதமான சூட்டில் எண்ணெய் சேர்க்கவும்.
  3. பட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
  4. வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
  5. 1 லிட்டர் தண்ணீர், தேங்காய் பால், பிரியாணி இலை மற்றும் உப்பு சேர்க்கவும். வீட்டில் தயாரித்த தேங்காய் பால் சேர்த்தால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்.
  6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், வடிகட்டிய அரிசியை சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடிவைத்து 15-2௦ நிமிடங்கள் அல்லது தண்ணீர் ஆவியாகும் வரை சமைக்கவும்.
Notes:
எச்சரிக்கை: சமையல் நேரம் மற்றும் தண்ணீரின் அளவு அரிசி வகை பொருத்து, அதாவது பழைய அல்லது புதிய அரிசிக்கு மாறுபடும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு ஒரு வழிகாட்டி மட்டுமே.