கொத்தமல்லி சிக்கன் ப்ரை
recipe Image
 
கொத்தமல்லி சிக்கன் ப்ரை கொத்தமல்லி இலை மற்றும் இந்திய மசாலாக்களால் ஆன மணமான உணவு.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :2-3 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • சிக்கன் – 5௦௦ கிராம்- சிறு துண்டுகளாக வெட்டியது
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
  • நறுக்கிய வெங்காயம் – 1 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 5 மில்லி
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி அலங்கரிக்க
  • உப்பு – சுவைக்கேற்ப

ஊறவைக்க தேவையான பொருட்கள்:

  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 6 மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 5
  • ஜீரகம் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி – 1 inch நீளம் அல்லது 3/4 inch அகல துண்டு
  • பூண்டு – 6 பல்
  • வினிகர் – 75 மில்லி
Method:
  1. இஞ்சி மற்றும் பூண்டைத் துருவிக் கொள்ளவும்.
  2. ஊறவைக்க தேவையான பொருட்களின் கீழ் உள்ள பொருட்களை மென்மையான பசையாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த பசையில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிக்கன் துண்டுகளை 2 மணி நேரம் ஊற விடவும்.
  4. வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.
  5. கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  6. சிக்கன் துண்டுகளை சேர்த்து இரு புறமும் பொன்னிறமாக விடவும்.
  7. இப்போது சிக்கன் ஊறவைத்த பசை, அரைத்த வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். மூடி வைத்து குறைந்த தீயில் 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.
  8. தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்.
  9. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
  10. கொத்தமல்லி சிக்கன் ப்ரை பரிமாறத் தயார்.