ஜுக்கீனி ஸ்டிர் ப்ரை
recipe Image
 
ஜுக்கீனி (சீமை சுரைக்காய்) ஸ்டிர் ப்ரை விரைவான, சத்தான மற்றும் சுவையான உணவு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • சீமை சுரைக்காய் – 2
  • வெண்ணெய் – 2-3 கிராம் அல்லது 5 மில்லி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • அரைத்த மிளகு – 1/2 தேக்கரண்டி
Method:
  1. சீமைசுரைக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். நீளமாக இருந்தால் குறுக்கே வெட்டிக் கொள்ளவும்.
  2. அகலமான வாணலியை சூடாக்கவும்.
  3. சீமைசுரைக்காய்களை வாணலியில் தனித் தனியாக அடுக்கவும்.
  4. ஒரு துளி வெண்ணெய்யை வாணலியில் விடவும்.
  5. 1 அல்லது 2 நிமிடங்கள் வறுக்கவும். அதை திருப்பி 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
  6. மேலே உள்ள 2 முறைகளை அனைத்து துண்டுகளுக்கும் பின்பற்றவும்.
  7. சன்னமாக இருந்தால் சுருட்டி சூடாக பரிமாறவும்.