உளுத்தம் பயிறு-பின்டோ பீன்ஸ் மசாலா ப்ரோட்டின் சத்து மிக்க சப்பாத்தி சைடு டிஷ்.
Preparation Time : 10 நிமிடங்கள்
Marination Time :ஓர் இரவு முழுவதும் Soaking Time :
Cooking Time :
30-45 நிமிடங்கள்
Serves :
6-8
Ingredients:
கருப்பு உளுத்தம் பயிறு – 15௦ கிராம் அல்லது 1/2 200 மில்லி டீ கப்
பின்டோ பீன்ஸ் – 4௦ கிராம் அல்லது 3 மேசைக்கரண்டி நிறைய
(விரும்பினால்)
வெங்காயம் – 1 நடுத்தர அளவு
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 1
இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
மசாலாக்கள்:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
Method:
உளுத்தம் பயிறு மற்றும் பின்டோ பீன்சை ஒரு இரவு ஊற வைத்து வடிக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
பிரஷர் குக்கரை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, மிளகாய் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3-4 நிமிடங்கள் கிளறவும்.
தக்காளி கூழ் மற்றும் ஊற வைத்த பயிரை சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் மூடி வைக்காமல் சமைக்கவும்.
1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் குறைந்த தீயில் 1௦-12 நிமிடங்கள் சமைக்கவும். பிரஷர் அடங்கும் வரை மூடியை திறக்க வேண்டாம்.
மசாலாவின் பதத்தை பார்க்கவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நீர்த்து இருந்தால் சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.