தயிர் வடை
recipe Image
 
தயிர் வடை எல்லோராலும் ரசித்து சாப்பிடப்படும் சுவையான உணவு.

Marination Time :1-2 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • உளுத்தம் பருப்பு – 25௦ கிராம்
  • அரைத்த அரிசி – 1 மேசைக்கரண்டி
  • சோடா மாவு – 1/8 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 சிறியது
  • நுணுக்கிய மிளகு – 1 தேக்கரண்டி
  • துருவிய இஞ்சி – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
  • எண்ணெய் – 35௦ மில்லி வறுக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தயிர் – 1 மேசைக்கரண்டி

தயிர் கலவைக்கு தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உடைத்த உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • துருவிய இஞ்சி – 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • தயிர் – 75௦ மில்லி
  • கொத்தமல்லி இலை – அலங்கரிக்க
Method:

    தயாரிக்கும் முறை

    1. உளுத்தம் பருப்பை கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும்.
    2. வெங்காயம், கருவேப்பிலை மற்றும் மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியை துருவிக்கொள்ளவும். மிளகை நுணுக்கிக்கொள்ளவும்.
    3. உளுத்தம் பருப்பை உப்பு, சோடா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நுரைக்கும் வரும் வரை நைசாக அரைக்கவும்.
    4. அரைத்ததை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
    5. அரைத்த அரிசி, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து நன்றாக கலக்கவும்.
    6. மாவை சாதாரண அறை வெப்பத்தில் 2 மணி நேரமாவது வைக்கவும்.

    சமையல் முறை:

    1. அகலமான வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
    2. கடுகு, உடைத்த உளுந்து, கருவேப்பிலை, இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து பொரிக்கவும்.
    3. அடுப்பை நிறுத்தி விட்டு அடித்த தயிரை சேர்த்து கலக்கவும். இந்த தயிர் கலவையை தனியாக வைத்துக்கொள்ளவும்.
    4. கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்க்கவும்.
    5. ஒரு மேசைக்கரண்டி அளவு மாவைக் கையில் எடுத்து வடையாக தட்டி நடுவில் ஓட்டை போடவும். அதை எண்ணெயில் போட்டு பொரிக்கவும். ஒரே நேரத்தில் 3-4 பொரிக்கலாம்.
    6. ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும்.
    7. இரு புறமும் ஒரே சமமாக பொன்னிறமானவுடன், அவற்றை நீக்கி வெந்நீரில் போடவும்.
    8. அடுத்த வடைகளை பொரிக்கவும். அவற்றை எடுப்பதற்கு முன்பு வெந்நீரில் உள்ள வடைகளை தயிர் கலவையில் போடவும்.
    9. மேலே உள்ள செய்முறையை அனைத்து வடைகளுக்கும் பின்பற்றவும்.
    10. தேவைப்பட்டால் அதிக தயிர் சேர்க்கவும்.
    11. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
    12. சுவையான தயிர் வடை தயார்
    Notes:
    சாம்பார் வடை செய்து பார்க்க <a href="/recipes/sambar-vadai">இங்கே</a> கிளிக் செய்யவும்.