முட்டை சோறு
recipe Image
 
முட்டை சோறு விரைவாக சமைக்கக் கூடிய ஒரு சாத வகை. அதை பச்சடியுடன் அல்லது அப்படியே சாப்பிடலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • சாதம் – 4 கப்
  • முட்டை – 4
  • வெங்காயம் – 300 கிராம்
  • தக்காளி – 3
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி நிறைய
  • பச்சை மிளகாய் – 2
  • பட்டை – 1/2 inch நீள துண்டு
  • கிராம்பு – 2-3
  • எண்ணெய் – 100 மில்லி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய புதினா இலை – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  • தயிர் – 1 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி அலங்கரிக்க
Method:
  1. வழக்கத்தை விட குறைவான அளவு தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சாதத்தை சமைக்கவும். பழைய சாதம் கூட உபயோகிக்கலாம்.
  2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும்.
  3. 2-3 லிட்டர் கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் சேர்க்கவும்.
  4. எண்ணெய் சூடானதும் பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும்.
  5. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  6. தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் நறுக்கிய இலைகளை சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
  7. முட்டையை நன்றாக அடித்து கடாயில் சேர்க்கவும். அதனுடன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து சில நிமிடங்கள் கலக்கவும். பாத்திரம் அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
  8. சாதத்தை சேர்த்து கலக்கவும். 2-3 மேசைக்கரண்டி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றை தெளிக்கவும்.
  9. மூடி வைத்து 1௦ நிமிடங்கள் சமைக்கவும்.
  10. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
  11. முட்டை சோறு சாப்பிட தயார்.