இடியாப்ப சோறு
| |
|
|
மிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை சேர்த்து சுவையாக சாப்பிடலாம். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
|
Ingredients: |
- இடியாப்பம் ¬– 9-10
- முட்டை – 3
- வெங்காயம் – 100 கிராம்
- பச்சை மிளகாய் – 1 மிதமான காரத்துக்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
- நுணுக்கிய மிளகு – 1 தேக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- தேங்காய் பால்/பசும் பால் – 1௦௦ மில்லி
- கிராம்பு – 2
- எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
- நெய் – 2-3 தேக்கரண்டி
- முந்திரி – 7-8 (விரும்பினால்)
- கொத்தமல்லி இலை நறுக்கியது – 1/2 மேசைக்கரண்டி
|
Method: |
- ஒவ்வொரு முந்திரியையும் பாதியாக உடைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு அகலமான கோப்பையில் தேங்காய் பால் / பசும் பாலை வைக்கவும்.
- இடியாப்பத்தை பாலில் நனைத்து சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- எல்லா இடியாப்பத்துக்கும் இதே முறையை பின்பற்றவும்.
- முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் வைக்கவும். இப்போதைக்கு அடிக்க வேண்டாம்.
- நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், கிராம்பு சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மிளகு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- முட்டை, முக்கால் பங்கு நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் அல்லது முட்டை பாதி வேகும் வரை கிளறவும்.
- இடியாப்ப துண்டுகள் மற்றும் இடியாப்பம் ஊற வைத்த பாலை சேர்க்கவும். பால் மீதம் இல்லை எனில், 5௦ மில்லி பசும்பால் சேர்க்கவும்.
- நன்றாக கிண்டி நெய் சேர்க்கவும்.
- ஒரு கிண்ணத்தில் பரிமாறவும்.
- மீதமிருக்கும் கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
மாற்றத்திற்கு <a href="/recipes/Sweet-idiyaappam-egg">இனிப்பான இடியாப்ப சோறு</a> செய்து பார்க்கலாம். |