ஜாலர் உள்ளடம்
recipe Image
 
ஜாலர் உள்ளடம் சுவையானது என்பதால் விசேஷங்களுக்குத் தகுந்தது. ஆனால் இதை செய்ய அதிக நேரம் ஆகும்.
Preparation Time : 30-45 நிமிடங்கள்

Cooking Time : 45-60 நிமிடங்கள்

Ingredients:

    தோசைக்கு தேவையான பொருட்கள்:

    • மைதா மாவு – 1 கப் (25௦ கிராம்)
    • முட்டை – 1
    • உப்பு – சுவைக்கேற்ப

    ஸ்டப்பிங்கு தேவையான பொருட்கள்:

    • வெங்காயம் – 450 கிராம்
    • கேரட் – 1
    • தக்காளி – 1
    • எலும்பில்லா சிக்கன் – 400 கிராம்
    • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
    • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
    • ஜீரக தூள் – 1/2 தேக்கரண்டி
    • எண்ணெய் – 3-4 மேசைக்கரண்டி
    • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி
    • உப்பு – சுவைக்கேற்ப

    ஜாலர் உள்ளடம் தயாரிக்க:

    • எண்ணெய் – வறுக்க
    • முட்டை – 3
    • உப்பு – சுவைக்கேற்ப
    • மிளகு தூள் – சிறிதளவு
    Method:
    1. ஜாலர் தோசை செய்முறை:
    2. தோசைக்கு தேவையான பொருட்களை தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு செய்யவும்.
    3. கட்டிகளை நீக்க வடிகட்டிக் கொள்ளவும்.
    4. நான்-ஸ்டிக் கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் சேர்க்கவும்.
    5. இதற்கென தயாரிக்கப்பட்ட 1/3 துளை கப்பை எடுத்துக்கொள்ளவும்.
    6. இதில் ஜாலார் வடிவில் மாவை நிரப்பவும்.
    7. எண்ணெய்/வெண்ணெய் தேய்க்கவும்.
    8. வெந்ததும் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
    9. 5 முதல் 8 வரை உள்ள செய்முறையை அனைத்து மாவும் தீரும் வரை பின்பற்றவும்.

    உள்ளடம் செய்முறை:

    1. சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (1 cm மொத்தம் 2 cm நீளம்). வெங்காயம், தக்காளி மற்றும் கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    2. மிதமான சூட்டில் வாணலியை சூடாக்கிக் கொள்ளவும்.
    3. 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் கிளறவும் .
    4. சிக்கன் துண்டுகளை வாணலியில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.
    5. மீதமுள்ள எண்ணெயையும் சூடான கடாயில் ஊற்றி வெங்காயம், கேரட் சேர்த்து வெங்காயம் பாதி வேகும் வரை வறுக்கவும்.
    6. இப்போது தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மசாலா தூள்கள் சேர்த்து தக்காளி வேகும் வரை சமைக்கவும்.
    7. சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
    8. நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து ஸ்டப்பிங்கை அடுப்பில் இருந்து நீக்கி ஆற விடவும்.

    ஜாலர் உள்ளடம் செய்யும் முறை:

    1. உப்பு, மிளகு சேர்த்து முட்டையை அடித்துக் கொள்ளவும்.
    2. மிதமான சூட்டில் கடாயை சூடாக்கவும்.
    3. ஒரு தட்டில் 2 ஜாலர் வைக்கவும்.
    4. ஒரு மேசைக்கரண்டி முட்டை கலவையை ஜாலர் மீது பரப்பி சதுரமாக மடிக்கவும்.
    5. மடித்த ஜாலர் உள்ளடத்தை கடாயில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
    6. ஜாலர் உள்ளடத்தை திருப்பி போட்டு மீண்டும் சமைக்கவும்.
    7. அடுப்பில் இருந்து நீக்கி ஒரு பெரிய தட்டில் ஒரே லேயராக வைக்கவும். இல்லையெனில் வேர்வை விட்டு சொதசொதப்பாகிவிடும்.
    8. 3 முதல் 8 செய்முறைகளை அனைத்து ஜாலர் உள்ளடத்திற்கும் பின்பற்றவும்.