கோவக்காய் பொரியல்
recipe Image
கோவக்காய் பொரியல் சாதம் அல்லது சப்பாத்திக்கு ஏற்ற சைடு-டிஷ்.
Preparation Time : 10 நிமிடங்கள்
Cooking Time : 10-15 நிமிடங்கள்
Serves : 3-4
Ingredients:
  • கோவக்காய் – 25௦ கிராம்
  • வெங்காயம் – 1 சிறியது
  • தக்காளி – 1
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
  • கருவேப்பிலை – சிறிதளவு (விரும்பினால்)
  • எண்ணெய் – 1 & 1/2 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
  1. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்; கோவக்காயை மெல்லிய துண்டுகளாக நறுகிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  3. கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. தக்காளி, அனைத்து மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  5. நறுக்கிய கோவக்காய் சேர்த்து கிளறவும்.
  6. 1/3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 8-1௦ நிமிடங்கள் அல்லது காய் வேகும் வரை சமைக்கவும். சில நிமிடங்களுக்கு ஒரு முறை மூடியைத் திறந்து கிளறவும்.
  7. கோவக்காய் பொரியல் சாப்பிடத் தயார்.
Notes:
இது சாதம் மற்றும் a href=”/recipes/Sambar”>சாம்பார், ரசம், <a href=”/recipes/Paruppu aanam”>பருப்பு ஆனம், பருப்பு, முட்டை புளிக்குழம்பு, புளி முட்டை ஆம்லெட் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு  சுரைக்காய் குழம்பு,  சுரைக்காய் குழம்பு ௦2 அல்லது இறாலுடன் முருங்கைக்காய் ஆகியவற்றை செய்து பார்க்கலாம்.