வெந்தய சிக்கன் மசாலா
வெந்தய சிக்கன் மசாலா, சிக்கன் மற்றும் வெந்தய கீரையால் ஆன சத்தான மற்றும் சுவையான சைடு-டிஷ்.
Marination Time :
2-3 மணி நேரம்
Soaking Time :
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Ingredients:
எலும்பில்லாத சிக்கன் – 5௦௦ கிராம்
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2
வெந்தய கீரை – 15௦ கிராம் அல்லது 1 கட்டு
இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
1 1/2 அதிக காரத்துக்கு
பச்சை மிளகாய் – 2
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
பட்டை – 1” நீள துண்டு
நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி + 1 மேசைக்கரண்டி இறுதியில்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
ஊறவைக்க தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
Method:
ஊறவைக்க தேவையான பொருட்களின் கீழ் உள்ளவையோடு சிக்கனை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்; மிளகாயை கீறிக் கொள்ளவும்; வெந்தய கீரையில் இலைகளை கில்லி எடுத்து கழுவவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.
பட்டை, வெங்காயம், மிளகாய் சேர்க்கவும். சில நிமிடங்கள் கிளறவும்.
இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
சிக்கன் கலவையை சேர்த்து கிளறி சில நிமிடங்கள் வதக்கவும்.
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் வெந்தய கீரையை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் அல்லது எண்ணெய் வெளியே வரும் வரை சமைக்கவும்.
கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
இது சப்பாத்தி/நாணுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு <ahref=”/recipes/Ginger-chicken”>இஞ்சி சிக்கன் மசாலா</a> செய்து பார்க்கலாம்.