மூணு காய் பொரியல்
recipe Image
 
மூணு காய் பொரியல், வேர் காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் ஆனது. சாதத்துடன் சுவைக்கத்தக்கது
Preparation Time : 10-15 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • உருளைக் கிழங்கு நடுத்தர அளவு – 2
  • காரட் சிறியது – 2
  • பீட்ரூட் சிறியது – 2
  • பச்சை பீன்ஸ் – 5௦ கிராம் (விரும்பினால்)
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • தேங்காய்த் துருவல் – 1-2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • சமையல் எண்ணெய் – 5 தேக்கரண்டி
  • உப்பு – தேவைகேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
  • 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  • ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
Method:
  1. காய்கறிகளைக் கழுவி 1/2 cm அளவு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பீன்சை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.
  3. ஒரு நிமிடம் கழித்து, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
  4. பீட்ரூட் துண்டுகள் மற்றும் 1/8 தேக்கரண்டி உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
  5. மூடி வைத்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, உருளைக்கிழங்கு, காரட் மற்றும் பீன்ஸ் சேர்க்கவும். சில நிமிடங்கள் கிளறவும்.
  7. மூடி வைத்து, காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும். இதற்கு 15 நிமிடங்கள் ஆகலாம். அவ்வப்போது மூடியைத் திறந்து காய்கறிகளை கிளறி விடவும்.
  8. காய்கறிகள் வெந்தவுடன் ஜீரகத் தூள் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வறுக்கவும்.
  9. தயாரானதும் பரிமாறவும்.
  10. தேங்காய்த் துருவல் தூவி அலங்கரிக்கவும்.
Notes:
இது சாதம் மற்றும் <ahref=”/recipes/sambar”>சாம்பார்</a>/<ahref=”/recipes/Mung-Dhal-Curry”>பருப்பாணம்</a>/<ahref=”/recipes/Rasam”>ரசம்</a>/<ahref=”/recipes/Dhal”>பருப்பு</a> ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.