மட்டன் மசாலா
| |
|
|
மட்டன் மசாலா சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். |
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- மட்டன் – 500 கிராம்
- வெங்காயம் – 400 கிராம்
- தக்காளி – 4
- இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2-3
- பட்டை – 1” நீள துண்டு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி + 2 மேசைக்கரண்டி இறுதியில்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
|
Method: |
- வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலை யை நறுக்கிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரில் 3 மேசைக்கரண்டி எண்ணெய்யை சூடாக்கவும்.
- பட்டை, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளி, மிளகாய், அனைத்து மசாலாத தூள்கள் சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் வதக்கவும்.
- மட்டன் துண்டுகள், 5௦ மில்லி தண்ணீர் சேர்த்து கலக்கி சில நிமிடங்கள் சமைக்கவும்.
- மிதமான சூட்டில் சட்டியை மூடி சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும். பிரஷர் அடங்கியவுடன், மூடியைத் திறக்கவும்.
- ஒரு நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கி மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
- பிரஷர் குக்கரில் உள்ளவற்றை கடாயில் சேர்க்கவும்.
- குழம்பு கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
|
Notes: |
இது, சாதம் மற்றும் <a href=”/recipes/sambar”>சாம்பார்</a> அல்லது சப்பாத்தி/ நாணுடன் சாப்பிட சுவையானது. மாறுதலுக்கு <a href=”/recipes/Spinach-Lamb-Curry”>கீரை-ஆட்டுக்கறி குழம்பு</a>,<a href=”/recipes /Beetroot-Mutton-masala”> பீட்ரூட்-மட்டன் மசாலா </a> அல்லது <a href=”/recipes/Potato-Mutton-fry”>உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா</a> முயற்சிக்கவும்.
குறிப்பு: அடுப்பின் வேகம், மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.
கறியை சமைத்தவுடன் மசாலாவுடன் நல்ல மணத்துக்காக குடை மிளகாய் சேர்க்கலாம்.
|
|