பருப்பு ரசம்
| |
|
|
அதிக சுவைக்காக, துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசம். இது, மென்மையாக சமைத்த சாதத்துடன் சாப்பிட ஏற்றது. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
- புளி – 2 cm அளவு உருண்டை
- பூண்டு – 2-3 பல்லு
- தக்காளி – 1 பெரியது
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
|
Method: |
- பூண்டு பற்களை நசுக்கி, தக்காளியை வெட்டி, புளியை 1/2 கப் வெந்நீரில் ஊற வைக்கவும். பருப்பைக் கழுவி வடிக்கவும்.
- பிரஷர் குக்கரில் பருப்பு, பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- 3 விசில் வரும் வரை சமைத்து அடுப்பை நிறுத்தவும்.
- அந்நேரத்தில், ஊற வைத்த புளியில் இருந்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால் அதிக தண்ணீர் சேர்க்கவும்.
- பருப்பைக் கடைந்து, அதனுடன் புளி சாறு, பாதி அளவு நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும்.
- பருப்பு ரசத்தை மிதமான சூட்டில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- சிறிய கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்க்கவும்; எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து வெடித்தவுடன், மஞ்சள் தூள், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து, ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை நிறுத்தவும்.
- இந்த தாளித்த கலவையை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
- மீதமிருக்கும் கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
சிறந்த சுவைக்கு, மென்மையான சாதம், நெய் மற்றும் பொரியலுடன் சாப்பிடவும். |
|