பாயா
| |
|
|
பாயா (ஆட்டுக் கால் குழம்பு) இடியாப்பம் மற்றும் ஆப்பமத்திற்கு பலரால் விரும்பப்படும் சுவையான உணவு. |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
11/2 - 2 மணி நேரம்
|
Ingredients: |
- ஆட்டுக் கால் – 4
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- பட்டை – 3 cm நீள துண்டு
- வெங்காயம் – 2 நடுத்தர அளவு
- தக்காளி – 4-5
- கத்திரிக்காய் – 6-7
- பச்சை மிளகாய் – 2-3
- இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி (திக் ஆக்க - விரும்பினால்)
- டின் தேங்காய் பால் – 4 மேசைக்கரண்டி அல்லது
- 250 மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
|
Method: |
- வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்; மிளகாயைக் கிள்ளிக் கொள்ளவும்.
- கத்திரிக்காயை 2” துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், பட்டை சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அனைத்து மசாலாத் தூள்கள், கத்திரிக்காய் மற்றும் ஆட்டுக் கால் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
- நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- குக்கரில் 5௦௦ மில்லி தண்ணீர் சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.
- முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 1 மணி 3௦ நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
- அடுப்பை நிறுத்தி, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்; அரைத்த அரிசியை சேர்க்க விரும்பினால் இப்போது சேர்க்கவும். தேவைப்பட்டால் அதிக தண்ணீர் சேர்க்கவும். வீட்டு தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால், இப்போது தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- இதை மிதமான சூட்டில் 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
இடியாப்பம்/ ஆப்பம்/ சப்பாத்தி அல்லது பரோட்டா ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. |