பொடிக்கறி
recipe Image
 
பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • எலும்பில்லாத மட்டன் – 5௦௦ கிராம் – 1-2 cm துண்டுகளாக வெட்டியது
  • எண்ணெய் – 4-5 மேசைக்கரண்டி
  • பட்டை – 3 cm நீள துண்டு
  • கிராம்பு – 2 (விரும்பினால்)
  • வெங்காயம் – 100 கிராம்
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1-2 தேக்கரண்டி அலங்கரிக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

அரைக்க வேண்டியவை:

  • துருவிய தேங்காய் – 4 மேசைக்கரண்டி நிறைய
Method:
  1. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, அதனுடன் தண்ணீரை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யை கடாயில் ஊற்றி சூடாக்கவும். மீதி எண்ணெய்யை கடைசியில் வறுக்க வைக்கவும்.
  3. எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வதக்கவும்.
  5. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. மசாலாத் தூள்கள், மட்டன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  7. 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.
  8. முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து சுமார் 12 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
  9. அடுப்பை அணைத்து விட்டு, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
  10. ஒரு நான்-ஸ்டிக் வாணலியை சூடாக்கி, மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
  11. அரைத்த தேங்காய் மற்றும் சமைத்த கறியில் உள்ள தண்ணீரை சேர்க்கவும். மிதமான சூட்டில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். சமைத்த கறியை சேர்க்கவும்.
  12. குறைந்த சூட்டில் 7-8 நிமிடங்கள் அல்லது படத்தில் உள்ளது போல் சுக்கவாகும் வரை வறுக்கவும். கறி தீயாமல் பார்த்துக் கொள்ளவும்.
  13. கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரிக்கவும்
Notes:
இது சாதம் மற்றும் <a href="/recipes/sambar">சாம்பார்</a> அல்லது <a href="/recipes/Bisibella-baadh">பிசிபெல்லா பாத்</a> ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.