பூரி
recipe Image
 
குழந்தைகளுக்கு பிடித்த பூரியை வீட்டில் சுலபமாக செய்யலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • ஆட்டா (கோதுமை மாவு) – 2 கப்
  • மைதா மாவு – 2 கப்
  • ரவை – 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
  • சர்க்கரை – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • எண்ணெய் – பொரிக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
  1. ஆட்டா, மைதா, ரவை, சர்க்கரை மற்றும் உப்பை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மிருதுவாக, உருண்டை பிடிக்கும் பதத்தில் பிசையவும்.
  2. போதுமான நேரம் இருந்தால், 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
  3. 3-4cm அளவு பந்துகளாக உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  5. ஒவ்வொரு உருண்டையையும் எண்ணெய் தேய்த்து தட்டையாக தேய்த்துக் கொள்ளவும்.
  6. இவற்றை எண்ணெயில் போட்டு, இரு புறமும் உப்பும் வரை நன்றாக பொரிக்கவும்.
Notes:
<a href=”/recipes/Potatoes-masala”>உருளைக்கிழங்கு மசாலா</a>, <a href=”/recipes/channa-masala”>சன்னா மசாலா</a> அல்லது<a href=”/recipes/dhal”>பருப்பு</a> ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.