உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா
| |
|
|
உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா, ஆட்டு இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் ஒரு சைடு-டிஷ். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- ஆட்டுக் கறி/ மட்டன் – 5௦௦ கிராம்
- உருளைக்கிழங்கு – 2 சிறியது
- வெங்காயம் – 250 கிராம்
- தக்காளி – 3
- இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
- 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
- பச்சை மிளகாய் – 1
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- பட்டை – 1” நீள துண்டு
- கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி மற்றும் 2 தேக்கரண்டி இறுதியில்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
|
Method: |
- உருளைக்கிழங்கை 2cm அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்; வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரில் எண்ணெய்யை சூடாக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். அவற்றை குக்கரில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.
- பட்டை மற்றும் வெங்காயத்தை பிரஷர் குக்கரில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் ஜீரகத் தூள் சேர்த்து கிளறி 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
- மட்டன் துண்டுகளை உப்புடன் சேர்த்துக் 3-4 நிமிடங்கள் கிளறவும்.
- மூடி வைத்து மிதமான சூட்டில் பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும். பிரஷர் அடங்கியவுடன் மூடியைத் திறக்கவும்.
- மிதமான சூட்டில் குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்
|
Notes: |
இது சாதம்/சப்பாத்தி/நாணுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு <a href="/recipes/Beetroot-Mutton -masala">பீட்ரூட் மற்றும் மட்டன் மசாலா</a> முயற்சிக்கலாம். <a href="/CookingWarning#Lamb" target="_blank"> சமையல் குறிப்பு</a> கவனிக்கவும். |