இறால்ஆணம்
recipe Image
 
எளிதாக செய்யப்படும் இந்த இறால் ஆணத்தை ஆப்பம் அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • ஓடு நீக்கிய இறால் - 25௦ கிராம்
  • வெங்காயம் - 1 நடுத்தர அளவு
  • தக்காளி - 2 நடுத்தர அளவு
  • உருளைக்கிழங்கு - 1 நடுத்தர அளவு அல்லது கத்தரிக்காய்- 4-5 சிறியது
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1-2 தேக்கரண்டி
  • மிளகு தூள் -1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் -1
  • டின் தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி அல்லது
  • 150ml வீட்டில் செய்த தேங்காய்ப்பால்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு
Method:
  1. வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலை எல்லவற்றையும் வெட்டி கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கு அல்லது கத்தரிக்காயை நீட்டமாக வெட்டி கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் சூடு பண்ணவும்.
  3. அதனுடன் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.
  4. இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் கத்தரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  6. அதனுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
  7. 1 கப் தண்ணீரை சேர்த்து உருளைக்கிழங்கு அல்லது கத்தரிக்காய் நன்கு வேகும்வரை சமைக்கவும்.
  8. பின்னர் இறால் சேர்த்து 1-2 நிமிடம் சமைக்கவும்.
  9. தேங்காய் பால் சேர்த்து சில நிமிடங்கள் சூடு பண்ணவும்.
  10. கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.
Notes:
இதனை சப்பாத்தி, ஆப்பம் அல்லது தோசையுடன் சாப்பிடலாம். மாறுதலுக்கு <a href="/recipes/Lamb-matton-stew">மட்டன் குழம்பு</a>, <a href="/recipes/Chicken-curry">சிக்கன் குழம்பு</a> செய்து பார்க்கலாம்.