சர்க்கரை பொங்கல்
| |
 |
|
சர்க்கரை பொங்கலை விருந்து உணவுக்கு பின் ஸ்வீட்டாகவோ அல்லது காலை நேரத்தில் வென்பொங்கலுடன் இன்னொரு பொங்கலாகவோ செய்து சாப்பிடலாம். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
|
Ingredients: |
- ப.அரிசி – 25௦ கிராம்
- பாசிப் பருப்பு – 125 கிராம்
- நெய் – 100 கிராம்
- வெல்லம் – 350-400 கிராம்
- முந்திரி – 8-10
- ஏலக்காய் – 2-3
|
Method: |
- வாணலியை சூடாக்கி பாசிப் பருப்பை சில நிமிடங்கள் வறுக்கவும்.
- அரிசி, பருப்பு, ¾ பங்கு நெய் மற்றும் 6௦௦ மில்லி தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
- பருப்பு வெந்தவுடன், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
- கடாயை சூடாக்கி மீதமுள்ள நெய், முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
- சக்கரப் பொங்கலை வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.
|
Notes: |
உடைத்த பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி பயன்படுத்த லாம். |