ரசம்
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரிந்த எளிமையான மற்றும் சுவையான உணவு.
Posted by
ShareRecipes Staff
27/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 3.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 2-3
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
இரவு உணவு மதிய உணவு ரசம்(soup)
தேவையான பொருட்கள் :
- புளி – 2cm அளவு உருண்டை/ நெல்லிக்காய் அளவு
- தக்காளி சிறியது – 1/2
- பூண்டு பல்லு – 2 சிறியது
- ஜீரகம் – 1/2 தேக்கரண்டி
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- காய்ந்த சிகப்பு மிளகாய் – 1
- கருவேப்பிலை – 4-5
- கொத்தமல்லி இலை – சில
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- சாம்பார் பொடி – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- வெந்நீர் – 2௦௦ மில்லி
- தண்ணீர் – 25௦ மில்லி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
முறை :
- புளியைக் கழுவி வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
- ஜீரகம், மிளகு, மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை இடித்துக் கொள்ளவும்.
- புளிச் சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- 1/2 லிட்டர் வாணலியை மிதமான சூட்டில் சூடாக்கி, எண்ணெய் சேர்த்து, இடித்த பொருட்களை தாளிக்கவும்.
- தக்காளி, புளிச் சாறு, கொத்தமல்லி இலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- விருப்பப் பட்டால் சாம்பார் பொடி சேர்க்கலாம்.
- அடுப்பை குறைத்து வாணலியை மூடி 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
குறிப்புகள் : புளிச் சாறுக்கு பதிலாக எலுமிச்சை சாறு அல்லது தக்காளி கூழ் சேர்க்கலாம். சிறந்த சுவைக்கு, குழைவாக சமைத்த சாதம், நெய் மற்றும் பருப்புடன் சாப்பிடலாம்.
மற்ற பெயர்கள் : rasam
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு